தேற்றரவாளன் போதித்து, நினைப்பூட்டுவார் (Comforter will teach and remind you)

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (யோவான் 14:26).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rzIq6LG4H8A

தேற்றரவாளன் என்ற வார்த்தையின் மூலக் கிரேக்க வார்த்தையாகிய பாராக்ளீட்டஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் நம் அருகில் காணப்பட்டு, நமக்கு உதவியாளராகவும், ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகிறவர் என்பதாகும். இயேசு சிலுவைக்குக் கடந்து செல்லுவதற்கு முன்பு, மேல்வீட்டறை உபதேசத்தில் ஆவியானவரைக் குறித்து அதிகமாக போதித்தார்.   இயேசுவின் பூமிக்குரிய மூன்றரை வருட ஊழியத்தில் அவர் சீஷர்களோடு காணப்பட்டு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறவராய், ஆலோசகராய், வழிநடத்துகிறவராய்க் காணப்பட்டார்.   அவர் சிலுவையில் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் அனேகருக்குத் தரிசனமாகி பின்பு பரமேறிச் செல்லப் போகிறார். அதன்பின்பு, அவருடைய ஊழியத்தை ஆவியானவர் செய்ய வேண்டும். ஆகையால் தேற்றரவாளனாகிய ஆவியானவரைக் குறித்தும் அவருடைய ஊழியத்தைக் குறித்தும் அதிகமாக வெளிப்படுத்தினார்.

ஆவியானவர் எப்பொழுதும் நம்மோடு கூட காணப்படுகிறவர். நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் என்று யோவான் 14:16 கூறுகிறது. அண்ட சராசரங்களைச் சிருஷ்டித்தவர் நம்மை ஆலயமாக்கி, நம்மோடு கூட காணப்படுகிறார் என்பது தைரியத்தையும் நம்பிக்கையையும் நமக்குக் கொடுக்கிறது. ஆகையால் நான் தனிமையாய்க் காணப்படுகிறேன் என்று ஒருபோதும் நினைக்காதிருங்கள். அடுத்ததாக, அவர் எல்லாவற்றையும் குறித்து நமக்குப் போதிக்கிறவர் என்பதை அறியும் போது, நமக்கு மறைவானதும் கடினமானது என்றும் ஒன்றும் காணப்படுவதில்லை. அவர் சர்வஞானி, சகலத்தையும் அறிந்தவர்.  நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை, அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது என்று 1 யோவான் 2:27 கூறுகிறது. அவர் வசனங்களைக் குறித்து உங்களுக்கு கற்றுத் தருவார், உலகத்தில் வாழவேண்டிய முறைமைகளைக் கற்றுத்தருவார். நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களாய்க் காணப்பட்டால் அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். அடுத்ததாக, ஆவியான தேவன் இயேசுவின் போதனைகளை நம்முடைய நினைவிற்குக் கொண்டு வருகிறவர். நாம் பொதுவாகவே மறதி உள்ளவர்கள், ஒருவர் நமக்கு நினைப்பூட்டுகிறவராய் நம்மோடு காணப்படுகிறார் என்பது நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. இயேசுவின் போதனைகள், அப்போஸ்தலருடைய நிருபங்கள் எல்லாம் நம்முடைய நினைவில் காணப்படும் போது நாம் இடறல் அடையாமல் ஜெய ஜீவியம் செய்யமுடியும் அடுத்ததாக, சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர். நம்மையும் ஆண்டவரைப் பற்றி சாட்சி பகிர தைரியப்படுத்துவார். அதுபோல, தேற்றரவாளன் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும்,  நம்மைக் கண்டித்து உணர்த்துகிறவர். நம்முடைய தவறுகளைச் சுட்டிக்காட்டி, சரி செய்யும் படிக்கு உணர்த்தி, நம்மை நீதியின் பாதையில் நடத்துகிறவர்.

கர்த்தருடைய பிள்ளைகளே, தேற்றரவாளனாகிய ஆவியானவருடைய ஆலயமாக நீங்கள் காணப்படுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள்.  அப்பொழுது உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *