சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சி பெற்ற ஒரு சகோதரனை அவனோடே கூட அனுப்பியிருக்கிறோம் (2 கொரி. 8:18)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VeR2petJRWg
வேதத்தில் பெயர் குறிப்பிடப்படாத கனத்திற்குரிய அனேக நபர்கள் காணப்படுகிறார்கள். நாகமானுக்கு அவன் மனைவியின் மூலம் நற்செய்தி சொன்ன சிறுமியான யூத அடிமைப் பெண்ணுடைய பெயர் எழுதப்படவில்லை. தனக்கு உணவாகக் காணப்பட்ட ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் சந்தோஷத்தோடு இயேசுவிடம் கொடுத்து அனேகருக்கு ஆசீர்வாதமாய்க் காணப்பட்ட சிறுவனுடைய பெயர் எழுதப்படவில்லை. இயேசு பார்த்துக் கொண்டிருக்கும் போதே தன் ஜீவனத்திற்குண்டான இரண்டு காசுகளையும் காணிக்கைப் பெட்டியில் சந்தோஷத்தோடு போட்ட விதவையின் பெயர் எழுதப்படவில்லை. கடைசி நேரத்தைப் பயன்படுத்தி இயேசுவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்ட சிலுவைக் கள்ளனுடைய பெயர் எழுதப்படவில்லை. இப்படிப்பட்ட ஒரு சில நபர்கள் வேதத்தில் காணப்படுகிறார்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தில் எல்லாச் சபைகளிலும் மிகவும் பிரபலமான ஒரு சுவிஷேகனைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய பெயர் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை. இவர் பெரிய அப்போஸ்தலனாகிய பவுலின் சார்பாகத் தீத்து கொரிந்து சபைக்குச் சென்ற வேளையில் அவருடன் கொரிந்துவுக்கு சென்றவர். அதுபோல தர்மக் காணிக்கையை பவுல் கொண்டு போகையில் அவருக்கும் வழித்துணையாயிருக்கும் படிக்குச் சபைகளால் தெரிந்து, ஏற்படுத்தப்பட்டவனாயும் காணப்பட்டவர். சிலர் இவரை லூக்கா, பர்னபா, சீலா மற்றும் தீமோத்தேயுவாகக் காணப்படலாம் என்று கூறினாலும் உண்மையாக அவர் யாரென்று யாருக்கும் தெரியாது. அவருடைய அடையாளம் தெரியப்படவில்லை என்றாலும், அவர் எல்லாச் சபைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட உண்மையும் உத்தமுமுள்ள சுவிஷேகன் என்பது புலனாகிறது. இதிலிருந்து உண்மையும் உத்தமுமாய் கர்த்தரை சேவிக்கிறவர்களைப் பரலோகம் பிரபலப்படுத்துகிறது. அதுமாத்திலமல்ல, பரலோகத்தின் தேவனும் அவரைக் கனப்படுத்தி, அங்கீகரித்து அவரைக் குறித்து வேதத்தில் எழுதி வைத்திருப்பது கவனிக்கப்படத்தக்கது.
இந்நாட்களில் தங்களைப் பிரபலப்படுத்துவதற்கு எல்லா ஊழியர்களும் முயல்கிறார்கள். சமூக ஊடகங்களின் வாயிலாக உலகம் என்னையும், என்னுடைய கிருபைகளையும் அறிய வேண்டும் என்று விரும்புகிறவர்களும் திரளாய்க் காணப்படுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, மேற்கிலும் கிழக்கிலும் வனாந்தர திசைகளிலிருமிருந்து உயர்வுகள் வருவதில்லை. ஒருவனை உயர்த்துவதும், தாழ்த்துவதும் கர்த்தராய் காணப்படுகிறார். நீங்கள் உண்மையுள்ளவர்களாய், நம்பத்தக்கவர்களாய், வெளிப்படைத் தன்மையுடையவர்களாய்க் காணப்படும் போது, பரலோகத்தின் தேவன் உங்களைக் கனப்படுத்திப் பிரபலப்படுத்துவார். அது நிரந்தரமானதாகவும் நித்தியமானதாகவும் காணப்படும். அவர் அரண்மனை வாசலில் காவல்காரனாய்க் காணப்பட்ட மொர்தேய்க்காயைக் கனப்படுத்தி உயர்த்தியவர். அடிமைப் பெண்ணாய்க் காணப்பட்ட எஸ்தரைக் கனப்படுத்தி 127 தேசங்களுக்கு ராணியாய் உயர்த்தினவர். ஒருவனைக் கனப்படுத்துவதும், தாழ்த்துவதும் கர்த்தராய்க் காணப்படுகிறார். ஆகையால் பரலோகம் கனம் பண்ணத் தக்க ஒரு நபராய் வாழுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். அது இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு நன்மையையும் புகழ்ச்சியையும் கொண்டுவரும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

