பெரிய பர்வதம் சமபூமியாகும் ( Great mountain will Be Flattened )

சக 4: 7 பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NhTgQwiCgYI

தேவனுடைய பணியில், நாம் பலவிதமான தடைகளையும் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும். அவருடைய சித்தத்தை மட்டுமே முழுமனதுடன் செய்ய முயலும்போது, இத்தகைய மலை போன்ற தடைகளை ஏன் தேவன் அனுமதிக்கிறார் என்று நாம் வியக்கலாம். ஆனால், நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதே தேவனுடைய நோக்கம்; அதன் மூலம், அந்த மலைகள் அனைத்தையும் சமபூமியாக மாற்றும் அவருடைய வல்லமையை நாம் அனுபவிக்க முடியும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இயேசு தம் சீஷர்களை கலிலேயக் கடலைக் கடந்து செல்லுமாறு வற்புறுத்தினார். அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து சென்றபோது, ஒரு கடுமையான புயலைச் சந்தித்தனர். ஒருவேளை அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியாமல், கடலைக் கடக்காமல் இருந்திருந்தால், அந்தப் புயலைச் சந்தித்திருக்க மாட்டார்கள்; ஆனால், புயலை அடக்கும் கர்த்தருடைய வல்லமையை அவர்கள் அனுபவித்திருக்க முடியாது. புயல்களைச் சந்திக்கும்போதுதான், தேவனுடைய வல்லமையை நம்மால் அறிய முடியும். கீழ்ப்படியாத, சமரசம் செய்துகொள்ளும் விசுவாசி ஒருவேளை எளிதான வாழ்க்கையை வாழலாம்; ஆனால், அப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் தேவனுடைய வல்லமையை அனுபவிப்பதில்லை. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். (சங்கீதம் 34:19).

சாத்தானுக்கு எதிராக, தேவன் எப்போதும் நம் பக்கமே இருக்கிறார். நம்முடைய அவிசுவாசத்தைத் தவிர, நமக்காக அவர் செயல்படுவதைத் தடுக்க வேறெதுவும் முடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள். சாத்தானின் கோடிக்கணக்கான பிசாசுகளும் நமக்கு எதிராக நின்றாலும், நாம் தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தால், நமக்கான அவருடைய நோக்கங்களைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியாது. நாம் பெரிய மலைகளையும், பிசாசுகளையும், மனிதர்களின் எதிர்ப்புகளையும் பார்க்க நேரிடும். இருந்தாலும் நாம் செல்லும் இடமெல்லாம் தேவன் நமக்கு முன்னால் இருக்கும் மலைகளைத் தரைமட்டமாக்குவதைக் காண்போம்.

இந்த பூமியில் எத்தனை அரக்கர்கள் இருந்தாலும் சரி, நம் தேவன் அவர்கள் அனைவரையும் கையாள வல்லவர். “நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார். “நமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல் போகும்.” என்றும், “அவரே நம்மை நீதிமானாக நிலைநிறுத்துவார்” என்றும் தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். ஆகையால், ஒருவேளை உங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாம் மௌனமாக இருக்கலாம்; “நீதியுடன் நியாயந்தீர்க்கிறவரிடத்தில் உங்கள் காரியத்தை ஒப்புவித்துவிடுங்கள்” (1 பேதுரு 2:23). பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, கர்த்தருடைய ஆவியினாலேயே உங்களுக்கு முன்பாக மலை போல இருக்கும் தடைகள், பிரச்சனைகள், வியாதிகள் அனைத்தும் ஒன்று விடாமல் சமபூமியாகும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *