முதலாவது இருக்க வேண்டியது பலிபீடம் (The first must be the alter).

எஸ்றா 3:2. அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/U34_AggKuUk

பொதுவாக வீடு, அலுவலகம் போன்ற எந்த கட்டிடங்களை கட்டவேண்டுமானாலும், முதலாவது கட்டடம் கட்டவேண்டிய இடத்தில் தண்ணீர் வசதிகள் இருக்கிறதா? கால்வாய் வசதிகள் இருக்கிறதா என்று பாப்போம். வீடு கட்ட ஆரம்பிக்கும்போது, வானம் தோண்டி, வலுவான அஸ்திபாரத்தை தான் முதலாவது போடுவோம். ஆனால் எருசலேமிற்கு திரும்பி வந்த ஜனங்கள் முதலாவது பலிபீடத்தை கட்டினார்கள். ஆசரிப்பு கூடாரத்தில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் காணப்படுகிறது. வெளிப்பிரகாரத்திலிருந்து தான் உட்பிரகாரத்திற்கு கடந்து செல்ல முடியும். பலிபீடத்தை தாண்டி தான் பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் கடந்து செல்ல முடியும். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதை போலவும், ஆதியிலே வார்த்தை இருந்தது என்பதை போலவும், முதலாவது ஜனங்கள் செய்கிற காரியம் அவர்கள் பலிபீடத்தை கட்டினார்கள்.

இந்த உலகத்தில் அநேகம் பலிபீடங்கள் இருந்தாலும், நமக்கு ஒரு பலிபீடம் காணப்படுகிறது. அது கல்வாரி சிலுவையில் இயேசு தன்னை பலியாக செலுத்திய இடம். கல்வாரி சிலுவை என்னும் பலிபீடத்தை தாண்டாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. சிலுவை இல்லாமல் சிங்காசனம் இல்லை. முதலாவது நாம் ஆசீர்வாதங்களை சுதந்திரகிறதற்கு முன்பாக, நன்மைகளை ஆண்டவரிடம் கேட்பதற்கு முன்பாக, கல்வாரி பலிபீடத்தில் நம்மை நாமே சாஸ்டாங்கமாய் ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இயேசு ஜீவபலியாக தன்னை தானே கொடுத்தார். அதுபோல நாமும் முதலாவது நம்மை ஜீவபலியாக பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். ஜீவபலியாக நம்மை ஒப்புக்கொடுப்பது என்பது நம்முடைய சுயம் சாக ஒப்புக்கொடுப்பது என்பதை காணப்படுகிறது. நான், என்னால், என்னுடையது என்ற அகந்தையை பலியிட வேண்டிய இடம் தான் பலிபீடம்.

இஸ்ரவேல் ஜனங்கள் ஆலயத்தை கட்டுவதற்கு முன்பாக எப்பொழுது முதலாவது பலிபீடத்தை கட்டினார்கள்? எஸ்றா 3:1 கூறுகிறது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடியபோது பலிபீடத்தை கட்டினார்கள். எப்படி மேல் வீட்டறையில் 120 பேர் ஒருமித்து கூடினார்களோ, அதுபோல ஜனங்கள் ஏகோபித்து கூடியபோது, முதலாவது பலிபீடத்தை இஸ்ரவேல் ஜனங்கள் கட்டினார்கள். அதுபோல தான், நாம் சபையாக கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக எதை செய்தாலும், ஏகோபித்து செய்ய வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார். சகோதரர்கள் ஒருமித்து வாசம் செய்யும்போது அவர்கள் நடுவில் இருக்கிறவர் நம்முடைய தேவன். ஒருமனதோடு கல்வாரி சிலுவை என்னும் பலிபீடத்தில் நம்மை சமர்பிப்போம், அதற்கு பின்பாக மகா கெம்பீரமாய் (3:11) ஆர்ப்பரிக்கும் சிலாக்கியதை கர்த்தர் கொடுப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org