அன்போடு கற்பனைகளை கைக்கொள்ளுங்கள்(Love God and Keep His commandments):-

யோவா 14:15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/z8foqNpafww

இயேசு இந்த வசனத்தில் தேவ பிள்ளைகள் எப்படி கீழ்ப்படிய வேண்டும் என்ற சரியான நோக்கத்தை கற்று கொடுத்து இருக்கிறார். பழைய ஏற்பாட்டில் கீழ்ப்படிதல் என்பது அவர் கட்டளைக்கு கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம், கீழ்ப்படியாவிட்டால் சாபம் என்பதாக கர்த்தர் கூறி இருந்தார். இதை உபாகமம் 28ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இப்படி சொல்லுவதுண்டு, நீ பரீட்சையில் 80% வாங்கினால் புது ஆடை, இல்லையென்றால் உனக்கும் ஒன்றுமில்லை. நீ போட்டியில் முதலாவது வந்தால் சாக்கலேட் இல்லையென்றால் உனக்கு ஒரு வேலை சோறு கிடைக்காது என்று சொல்வதுண்டு. ஆனால் நாம் நம்முடைய பிள்ளைகளை அன்பினால் கீழ்ப்படியும்படி கற்று தருகிறவர்களாக காணப்பட வேண்டும்.

அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார் (எபேசியர் 4:15) என்று வசனம் சொல்லுகிறது. அன்புடன் சத்தியத்தை கைக்கொள்ளவேண்டும். அன்புடன் சத்தியத்தை கைக்கொள்வதிலும், கீழ்ப்படிவதிலும் நம்முடைய இருதயத்தை பழக்குவிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட அன்பு கூறுகிறவர்களுக்கு தேவன் என்ன தான் செய்வார்? வசனம் சொல்லுகிறது சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக் 1:12) என்பதாக. நீங்கள் ஒவ்வொருவரும் ஜீவ கிரீடம் பெறவேண்டுமென்று கர்த்தர் விருப்பம் உடையவராய் இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டில் கற்பனைகளை கைக்கொண்டு கீழ்ப்படிவதற்கு ஒரு வகையான பயம் காணப்பட்டது. ஆனால் இப்பொழுதோ கர்த்தருடைய கிருபையினால் பயமில்லாமல் அன்பினால் கீழ்ப்படியும்படியான சிலாக்கியதை கர்த்தர் கொடுத்திருக்கிறார். அதை தான் நாம் யோவான் 4:18ல் வாசிக்கிறோம் அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல என்பதாக.

அன்பினால் நீங்கள் அவர் கற்பனைகளை கைக்கொண்டு நடந்தால், ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அன்பினால் விபச்சாரம் செய்யாமல், வேசித்தனம் செய்யாமல், பிறனுடைய மனைவியை இச்சிக்காமல் அவருடைய கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். நீங்கள் இயேசுவின் மீது அன்பு கூறவில்லை என்றால், உங்களுடைய கீழ்ப்படிதல் செத்ததை போலத்தான் காணப்படும். ஆகையால் அன்போடு கர்த்தருடைய கற்பனைகளை கைக்கொள்ள ஒப்புக்கொடுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org