ஒன்றுபட்டால் … (If united …).

ரோம 15:5,6 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wuQMnw6uygw

தமிழில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; துண்டுபட்டால் இல்லை வாழ்வு என்ற ஒரு பழமொழியிண்டு. விமானம் பறக்க இரண்டு என்ஜின் தேவைப்படுமென்றால், ஒரு என்ஜினை வைத்து விமானம் புறக்கமுடியாது. வாகனத்தில் நான்கு சக்கரத்திற்கு பதிலாக மூன்று சக்கரம் மாத்திரமே இருக்குமென்றால், வாகனம் ஒரு அங்குலம் கூட நகராது. அதுபோல, விளையாட்டு போட்டியில் விளையாடும்போது பயிற்சியாளர் எல்லாரையும் ஒற்றுமையோடு விளையாடும்படி கேட்டுக்கொள்ளுவார். பெரிய பெரிய நிறுவனங்களில், வேலையில் குழுவாக இணைந்து வேலை செய்ய Team Work போன்ற பயிற்சியை எல்லாருக்கும் கொடுப்பார்கள். இப்படி உலகத்திலிருக்கும் நிறுவனங்கள் ஒருமனதோடு வேலைசெய்யவேண்டும் என்று வேலையாட்களை ஊக்குவிக்கிறார்கள். அதுபோல தான், கர்த்தருடைய பிள்ளைகளும் சபையில் ஒருமனதோடு காணப்பட வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் காணப்படலாகாது.

ஒரு சபையில் நீண்ட நாட்கள் இருந்து கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்தபிறகு, சிறிய சிறிய காரணங்களை சொல்லி, ஒருமனமில்லாமல் சபையை விட்டு செல்லுகிற விசுவாசிகள் அநேகம். ஒன்றை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும், நீங்கள் நல்ல ஆவிக்குரிய சபையில் இருந்து பிரிந்து செல்லுவதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம்; அதேபோல அந்த சபையை விட்டு பிரிந்து செல்லாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும். ஆகையால் சின்ன சின்ன காரணங்களை சொல்லி ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு நாணலை போல இல்லாமல், ஒருமனப்பாட்டை காத்துக்கொள்ளுகிறவர்களாய் காணப்பட வேண்டும்.

அதுபோல சபைக்குள்ளாக ஒருவருக்கொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாக காணப்படுங்கள். நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (கலா 5:15) என்ற எச்சரிப்பை பவுல் கலாத்திய சபைக்கு சொல்லுவதை பார்க்கமுடியும். வசனம் 1 கொரி 12:12,13 கூறுகிறது, எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம் என்பதாக. ஆகையால் நாமெல்லாரும் ஒரு சரீரத்தில் உள்ள அவயவங்கள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். ஸ்தோத்திரம் செலுத்தினால் தேவனை மகிமைபடுத்துகிறோம், அதுபோல நாம் ஒருமனதோடு இருப்பதாலும், ஒருவரையொருவர் ஏற்றுகொள்ளுவதாலும் தேவன் மகிமைப்படுகிறார் என்பதை அறிந்து எல்லாரையும் ஏற்றுகொள்ளங்கள். ஒருமித்து தேவனுடைய இராஜ்ஜியத்தை கட்டுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org