யோவா 15 : 9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4d_G7dbwb0A
ஆதி 22:2-ல் முதன்முதலாக நேசம், அதாவது ஆங்கிலத்தில் Love என்ற சொல் எழுதப்பட்டுள்ளது. அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகளில் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். அங்கு ஈசாக்கு, ஆபிரகாமின் ஒரே குமாரனாக, அவன் நேசிக்கும் மகனாக விவரிக்கப்படுகிறான். அதே அதிகாரத்தில், ஈசாக்கை பலிபீடத்தில் பலியிட ஆபிரகாம் கீழ்ப்படிந்தான், அது கல்வாரி சிலுவையின் தெளிவான பிரதிபலிப்பாக இருந்தது. அங்கே பிதாவாகிய தேவன், நம்முடைய பாவங்களுக்காகத் தம்முடைய ஒரே குமாரனைப் பலியாகக் கொடுத்தார். எனவே, 2-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அன்பு, பிதாவாகிய தேவனுக்குக் கிறிஸ்துமீதுள்ள அன்பைப் பிரதிபலிக்கிறது. வேதாகமத்தில் நேசம், அதாவது ஆங்கிலத்தில் Love என்ற சொல் இரண்டாவது முறையாக ஆதி 24:67-ல் எழுதப்பட்டிருக்கிறது. அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். இது ஈசாக்கு ரெபெக்காள் மீது கொண்டிருந்த அன்பைக் குறிக்கிறது. அதாவது, ஒரு கணவன் தன் மனைவி மீது கொண்ட அன்பு. இந்த அதிகாரம் முழுவதிலும் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, இது கிறிஸ்து தமது சபையின் மீது கொண்டுள்ள அன்பின் தெளிவான பிரதிபலிப்பாகும்.
புதிய ஏற்பாட்டில், யோவான் 15:9-ல் கர்த்தர் இந்த இரண்டு சத்தியங்களையும் இணைக்கிறார். பிதா என்னிடத்தில் அன்பாயிருக்கிறதுபோல என்று ஆதி 22:2-ல் காட்டப்பட்டுள்ள, ஒரு தந்தை தன் குமாரன் மீது கொண்ட அன்பைப் போல, நானும் உங்களிடத்தில் அன்பாயிருக்கிறேன் என்றும் ஆதி 24:67-ல் எழுதப்பட்டுள்ள, மணவாளன் தன் மணவாட்டி மீது கொண்ட அன்பிற்கு இணையான, கிறிஸ்து பாவியின் மீது கொண்டுள்ள அன்பாய் காணப்படுகிறது. இயேசு நம்மேல் முந்தி அன்பு கூர்ந்தார். அவருடைய அன்பில் நிலைத்திருங்கள் என்று இயேசு கூறுகிறார். இந்நாட்களில் உலக அன்பு மனிதர்களை விட்டு மனிதர்கள் என்று தாவிக்கொண்டே இருக்கிறது. உண்மையான அன்பை கண்டுபிடிப்பதே அரிதாகிப் போய்விட்டது. கடைசி நாட்களில் அன்பு தணிந்துபோகும் என்று ஆண்டவரே கூறிவிட்டார்.
கிறிஸ்துவில் நிலைதிருத்தல் என்றால், மணவாளன் என்ற முறையில் அவரோடு இணைந்து வாழும் வாழ்க்கை. எதையும் எவரையும் விட இயேசுவை நீங்கள் நேசிக்கிறவர்களாகவும் அன்புகூருகிறவர்களாகவும் காணப்படவேண்டும். அதைத்தான் பேதுருவிடம் இயேசு எதிர்பார்த்தார். தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார் (1 யோவான் 4:16) என்ற வார்த்தையின்படி, இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான் .
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

