பரம்புவாய்(You will spread out). 

ஆதியாகமம் 28 : 14. உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NiiXRypEQ2A

ஆதியாகமம் 28ம் அதிகாரம் ஒரு மேன்மையான அதிகாரம். கர்த்தர் நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தின் தகப்பனாகிய யாக்கோபை சந்தித்து, தரிசனமாகி அவனுக்கு கொடுத்த பல வாக்குத்தத்தங்களை குறித்து வாசிக்கலாம். ஈசாக்கு பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், யாக்கோபுக்கு ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகும்படி யாக்கோபை அனுப்பிவிட்டான். யாக்கோபு தன்னுடய ஏதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற சிந்தையோடு பதான் அராமிற்கு நேராக புறப்பட்டான். வழியில் ராத்தங்கும்படியாக ஒரு கல்லை தலையணையாக வைத்து தூங்கிக்கொண்டிருந்த போது, ஆண்டவர் அவன் சொப்பனத்தில் தோன்றி வாக்குத்தத்தங்களை கொடுத்தார். அதில் ஒன்று தான் நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய் என்ற வாக்குத்தத்தம். அவர் சொல்லியும் செய்யாதிருக்கிற கர்த்தர் அல்ல. மனம் மாற அவர் மனுபுத்திரனமல்ல. வாக்குத்தத்தங்களெல்லாம் கிருஸ்து யேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றுமே இருக்கிறது. தனிமனிதனாக சென்ற யாக்கோபு அவன் திரும்பி தன் தகப்பனிடம் வரும்போது இரண்டு பரிவாரங்களோடு வந்தான் என்று பார்க்கமுடியும். யாக்கோபின் சந்ததி பூமியெங்கும் பரவியது. பன்னிரண்டு கோத்திரங்களை பெற்றெடுத்தான். அதில் ஒரு கோத்திரமாகிய யூதாவின் கோத்திரத்திலிருந்து தான் யூத ராஜ சிங்கமாக நம்முடைய ஆண்டவரும் கர்த்தருமாகிய யேசுகிருஸ்து வந்தார். யாக்கோபு பரம்பினான். உங்களையும் பரம்ப செய்வார்.

எப்படி தண்ணீர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பரவுமோ, அப்படியாக நீங்கள் பரம்புவீர்கள், உங்கள் குடும்பம் பரம்பும், உங்கள் சபை பரம்பும், யேசுகிருஸ்துவின் சுவிசேஷம் பரம்பும். நீங்கள் இடங்கொண்டு வலங்கொண்டு பெருகுவீர்கள்.

காலேபுக்கு கர்த்தர் ஒரு வாக்குத்தத்தை கொடுத்தார். அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார். ( யோசுவா 14 : 9 ). காலேப் உத்தமமாய் பின்பற்றினபடியால் அவனும் அவனுடைய சந்ததியும் ஆசிர்வதிக்கப்பட்டது. நீங்களும் உத்தமமாய் கர்த்தரை சேவிப்பீர்களென்றால் கால் மிதிக்கும் தேசம் உங்களுக்கு சொந்தமாகி நீங்கள் பரம்புவீர்கள்.

பேதுரு ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, யூத மூப்பர்கள் அவனை சிறையில் அடைத்து இந்த சுவிசேஷம் பரம்ப கூடாது என்று அவனை எச்சரித்தார்கள். சுவிசேஷம் பரம்ப கூடாது என்று சத்துரு எவ்வளவோ முயற்சிகளை ஏறெடுத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது. ராஜ்யத்தின் சுவிசேஷம் பரம்பியது. இன்றைக்கு பரிசுத்த வேதாகமம் தான் அதிகமான மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளுது. பரிசுத்த வேதாகமம் தான் அதிகமாக அச்சிடப்பட்டு விற்கப்படுகிறது. கர்த்தருடைய சபை அநேக இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. பரம்ப கூடாது என்று எச்சரித்தபிறகும் பேதுருவும் மற்ற சீடர்களும் அமைதியாகி இருந்துவிடவில்லை. இன்னும் அதிகமாக ஜெபித்து முழு உலகமும் சுவிஷேத்தை அறிந்துகொள்ளும்படி பரம்பினார்கள்.

நான் தனிமையாய் இருக்கிறேன்; என்னுடைய எதிர்க்கலாம் எப்படி இருக்குமோ என்று யாக்கோபை போல கலங்கிப்போய் இருப்பீர்களென்றால்; கர்த்தர் உங்களுக்கு சொல்லுகிற வார்த்தை நீங்கள் நான்கு புறங்களிலும் பரம்புவீர்கள்.

கர்த்தர் தாமே உங்களை பரம்ப செய்வாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org