நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருப்பீர்கள்(All may go well with you).

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3 யோவான் 1:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Mt__327sXm0

யோவான் தன்னுடைய வயோதிப காலத்தில் சத்தியவசனத்தின்படி தான் நேசிக்கிற காயுவுக்கு எழுதின கடிதம் தான் 3 யோவானாய் காணப்படுகிறது. ஜெபத்தோடு அந்த கடிதத்தை எழுதும்போது, பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு என்று வாழ்த்துகிறான்.  காரணம் காயுவு சத்தியத்தில் நடக்கிறவனும் உண்மையுள்ளவன் என்று நற்சாட்சி பெற்றவனுமாய் காணப்பட்டான். அவனுடைய ஆத்துமா ஆவிக்குரிய பிரகாரமாய் வாழ்ந்திருந்தது.  ஆவியிலும் உண்மையிலும் அன்பிலும் தேவனோடு நெருங்கி ஜீவிக்கிறவனாய் காணப்பட்டான். ஆகையால் ஆவிக்குரிய வாழ்வில் செழித்திருந்த அவனை, பூமிக்குரிய, சரீரத்திற்குரிய நன்மைகளையும் பெற்று ஆசீர்வாதமாயிரு என்று வாழ்த்துகிறான்.

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக்கோபு 1:17).  கர்த்தரின் ஆசீர்வாதமே நமக்கு ஐசுவரியத்தைத் தரும். அதனோடே அவர் வேதனையைக் கூட்டுவதில்லை. அவரே நோயில்லாத சுகவாழ்வை தருகிறவர். நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குள் வாழ்ந்திருக்கும்போது, தேவபிரசன்னத்தினால் நிறைந்திருக்கும்போது, இம்மைக்குரிய எல்லா நன்மைகளையும் தருகிற கர்த்தர் அவர்.

கர்த்தர் மனுஷனை ஆவி, ஆத்துமா, சரீரமாய் சிருஷ்டித்தார். நாம் மரிக்கும்போது என்ன நடக்கும், ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகும். மனுஷனுடைய சரீரத்தை மண்ணிலிருந்து கர்த்தர் உருவாக்கினதால்,  சரீரமானது தான் முன்னிருந்த  பூமிக்குத் திரும்பிவிடும்.  உள்ளான மனுஷனான ஆத்துமா நித்தியத்தை முடிவுசெய்யும்.  கிறிஸ்துவுக்குள்ளாய் காணப்பட்டால் நித்திய மோட்சத்திற்கும், கிறிஸ்து இல்லாத ஜீவியம் செய்தால் நித்திய நரகத்திற்கும் நேராய் கடந்துசெல்லும். ஆகையால் தான் ஆத்துமா கர்த்தருக்குள்ளாக வாழ்ந்திருக்கவேண்டும்.  கர்த்தருடைய வார்த்தையினாலும் பரிசுத்தாவியின் வல்லமையினாலும் நிறைந்திருக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.  மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயம் செய்தாலும் தன் ஜீவனை, ஆத்துமாவை, இழந்தால் அவனுக்கு லாபமென்ன என்று வேதம் கேட்கிறது.  ஆத்துமா ஒருபோதும் நித்தியமோட்சத்தை இழந்துவிடக்கூடாது.

நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குள் வாழ்ந்திருக்கும் போது, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை தேடும்போது, மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் கூட்டிக்கொடுக்கிற கர்த்தர். 

கர்த்தர் தாமே உங்களை எல்லா ஆசிர்வாதங்களையும் பெற்று வாழ்ந்து சுகமாயிருக்கும்படி செய்வாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

En Aathuma Thuthikkuthae, Uthamiyae Vol. 10