உன் கையில் என்ன இருக்கிறது? (What is that in your hand?

கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான் (யாத்திராகமம்4:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ud7HZNz5KNM

  வனாந்திரத்தில் தேவ அழைப்பை பெற்று கொண்ட பின்பும் தயங்கிய மோசேயை பார்த்து தேவன் கேட்ட கேள்வி உன் கையில் என்ன இருக்கிறது?. அந்த சமயத்தில் மோசே கையில் ஒரு கோல் இருந்தது பின் நாட்களில் அந்த கோலை கொண்டே தேவன் பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

      தீர்க்கதரிசி எலிசாவிடம் ஒரு ஊழியக்காரனின் மனைவி தன் கணவன் மரித்து போனான் ஆனால் கடன் கொடுத்தவன் தன் இரண்டு பிள்ளைகளையும் அடிமைகளாக்க வந்தான் என்று முறையிட்டபோது எலிசா கேட்ட கேள்வி உன்னிடத்தில் என்ன இருக்கிறது ? (2 King 4:2)அந்த பெண் தன்னிடம் ஒரு குடம் எண்ணெய் மட்டுமே உள்ளது என்று சொன்ன பொது அதை கொண்டே கடன் பிரச்சனையை மாற்றி மீதம் எடுக்கக்கூடிய அற்புதத்தை அனுபவித்தாள்.

      5000 க்கும் அதிகமான புருஷர்கள் ஸ்திரீகள் மற்றும் சிறுபிள்ளைகளை போஷிப்பதற்கு இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வி “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு?” ஒரு சிறுவன் மட்டும் தன்னிடம் உள்ள 5 அப்பங்கள்  2 மீன்களை கொடுத்தபோது அதை கொண்டே கர்த்தர் ஆயிரங்களை போஷித்தார்.

      இன்றைக்கு உங்களிடத்தில் என்ன இருக்கிறது? நிச்சயமாக தேவன் ஒவ்வொருவருக்கும் எதாவது தாலந்து, வரங்கள், கிருபைகள் கொடுத்திருப்பார் . ஒரு தாலந்து கூட இல்லாதவர்கள் யாரும் இல்லை. உங்களிடத்தில் உள்ள அந்த கொஞ்சத்தை தேவனிடம் அர்ப்பணியுங்கள். அதை கொண்டே தேவன் பெரிய காரியங்களை செய்வார்.

      Hudson Taylor இங்கிலாந்து தேசத்தில் இருந்து புறப்பட்டு சீனா தேசத்தில் ஊழியம் செய்து லட்சங்களை கிறிஸ்துவிடம் நடத்தினார். ஒரு முறை அவரிடம் ஒரு கேள்வி கேட்கப் பட்டது “ஏன் இவ்வளவு பெரிய ஊழியத்தை தேவன் உங்களை கொண்டு செய்தார் “?அதற்கு Hudson Taylor “ தேவன் ஒரு பெரிய வேலையை செய்வதற்கு யார் மிகவும் பலவீனமானவன் என்று தேடினார் அதனால் தான்  என்னை கொண்டு இவ்வளவு பெரிய ஊழியத்தை செய்தார்” என்று பதிலளித்தார்.

     “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்”  – 1 Cori 1:27,28

All God’s giants have been weak men who did great things for God because they reackoned on God being with them – Hudson Taylor

B.Thivakar
Word of God Church
Doha – Qatar
www.wogim.org