அவர் கன்மலை (He is the Rock).

அவர் கன்மலை, அவர் கிரியை உத்தமமானது, அவர் வழிகளெல்லாம் நியாயம்,     அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன், அவர் நீதியும் செம்மையுமானவா (உபா. 32:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bS7qxQLM-uc

நாம் ஆராதிக்கிற தேவன் கன்மலையானவர். அவரே நம்மை ஜெனிப்பித்த கன்மலை. வேதத்தில் காணப்படுகிற கைகளால் பெயர்க்கப்படாத கல்,     தலைக்கல்,     மூலைக்கல்,     அஸ்திபாரக்கல்,     விலையேறப்பெற்றக் கல்,     பரிட்சிக்கப்பட்டகல் மற்றும் அடிக்கப்பட்ட கன்மலை,     இவைகள் எல்லாம் கிறிஸ்துவாகிய கன்மலையைக் குறிக்கிறது. கன்மலை என்பதற்கு அசைக்கப்படக் கூடாதவர் என்பது அர்த்தம். ஆகையால் கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் நிற்கிற அவருடைய பிள்ளைகளாகிய நீங்களும், ஒருநாளும் அசைக்கப்படுவதில்லை.  பெருமழை சொரியலாம்,      பெருவெள்ளமும்,     பெருங்காற்றும் அடித்து மோதலாம்,     நீங்கள் அசைக்கப்படுவதில்லை,     ஏனென்றால்,     நீங்கள் கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டவர்கள். கன்மலை வெடிப்பில் தங்கும் என் புறாவே என்றும் கர்த்தர்  உங்களை அழைக்கிறார். விக்கினங்கள் கடந்து போகும் மட்டும் அவருடைய காயங்களின் மறைவில் உங்களை ஒளித்து வைத்து கரங்களினால் மூடி உங்களைப் பாதுகாப்பார். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     நீங்கள் காண்கிறவைகள்  எல்லாம் அநித்தியமானவைகள்,     அஸ்திபாரங்கள் இல்லாதவைகள். அதையறிந்த விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம்,     அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து,     அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தராகிய  ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்,     ஏனெனில்,     தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான் என்று வேதம் கூறுகிறது. ஆபிரகாமைப் போல,     இந்த பூமிக்குரிய நிலையில்லாத வாழ்க்கையில் பரதேசியைப் போல வாழ்ந்து,     நித்திய வீடாகிய பரலோகத்தை  வாஞ்சியுங்கள். அப்போது கர்த்தர் பூமிக்குரிய எல்லா ஆசீர்வாதங்களை  உங்களுக்குத் தருவார்.  யாக்கோபுக்கு கன்மலையிலுள்ள தேனையும்,     கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெய்யையும் உண்ணும்படி கொடுத்தது போல,     பூமியின் கொழுமையை புசிக்கும் படிக்குச் செய்து,     உங்களை உயர்ந்த ஸ்தானங்களில் அமரும் படிக்குச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae