உங்களுக்குள்ளாக ஊற்றுத்தண்ணீராகிய ஆவியானவர் பொங்கிவருவார்(Spirit of God will spring up in you):-

எண்ணாகமம் 21:17 அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mshZ2fygcPQ

ஒரு குடும்பம் விவசாயத்திற்காக தண்ணீர் வேண்டி கிணறு தோண்ட ஆரம்பித்தார்கள். சுமார் ஐம்பது அடி வரை தோண்டியும் தண்ணீர் வரவில்லை. அவர்களுக்கோ ஒரே கவலை. வேறொரு இடத்தில் தோண்டினார்கள் அங்கேயும் தண்ணீர் வரவில்லை. இப்படியாக எல்லா இடங்களிலும் தண்ணீர் வேண்டி கிணறுகளை தோண்டினாலும் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஒரு நாள் அவர்கள் அதிக பாரத்தோடு கூட ஜெபித்தார்கள். ஆண்டவரே எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்படி செய்யும் என்று சொல்லி அதிகாலையில் எழுந்து ஜெபித்து வேறொரு இடத்தில் கிணறை தோண்ட ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சரியம் என்றால்,இப்பொழுது தோண்டின உடனே ஊற்று தண்ணீர் பொங்கி வந்தது. அந்த ஊற்று தண்ணீரை அடக்க முடியவில்லை, யாராலும் நிறுத்த முடியவில்லை, அந்த ஊற்று தண்ணீர் குறைந்து போகவே இல்லை. அப்படியாக நிரம்பி வழிந்தது.

இப்படித்தான் பரிசுத்த ஆவியானவர் ஊற்று தண்ணீராக உங்களுக்குள்ளாக இருந்து நிரம்பி வழியப்போகிறார். அவர் உங்களுக்குள் வாசம் செய்பவர். தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உங்களுக்காக உண்டு பண்ணுகிறவர் ஊற்று தண்ணீராக உங்களுக்குள் பொங்கி செயல்படுவார். ஒரு வேலை வனாந்தரம் போல சூழ்நிலை வரலாம், இருந்தாலும் உங்களுக்குள்ளாக ஊற்று தண்ணீராக செயல்படுகிற பரிசுத்த ஆவியானவர் வனாந்தரத்தில் தண்ணீர் உண்டாகும்படி செய்வார். மாத்திரமல்ல உங்களுக்குள்ளாக இருக்கிற ஊற்றுத்தண்ணீர் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக உங்களை மாற்றுவார்.

உங்களுக்குள்ளாக செயல்படப்போகும் பரிசுத்த ஆவியானவரை ஒருவராலும் தடை செய்ய முடியாது. ஒருவராலும் அடக்க முடியாது. அப்படியாக பொங்கி வழிகிற அனுபவத்திற்குள்ளாக பரிசுத்த ஆவியானவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நடத்துவார். கணுக்கால் அளவு அல்ல, முழங்கால் அளவு அல்ல, இடுப்பளவு அல்ல, நீச்சாழ் அனுபவத்திற்குள்ளாக நடத்துவார். இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும் (எசே 47:8-9). நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாவும், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளாக இருந்து ஊற்று தண்ணீராக செயல்படுவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org