ராபர்ட் கால்டுவெலின் மிஷினரி பயணம் (Robert Caldwell’s Missionary Journey).

ராபர்ட் கால்டுவெலின் மிஷினரி பயணம் (Robert Caldwell’s Missionary Journey)

மத் 28:19,20 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RIZyDFkOMDY

1814 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார் ராபர்ட் கால்டுவெல். தன் கல்வி முழுமையையும் அவர் ஸ்காட்லாந்தில் மேற்கொண்டார். கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக் கழகத்தில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது மொழியியல் ஆராய்ச்சியில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
பல்கலைக் கழகத்தில் சிறப்பு தேர்ச்சிப் பெற்று வெளியான கால்டுவெல்லுக்கு தேவனின் இராஜ்யத்தை கட்ட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கல் என்ற ஆண்டவருடைய கட்டளையின்படி, 1838-ஆம் ஆண்டு தமது 24-ஆவது வயதில் மிஷினரியாக தமிழ்நாட்டிற்கு பயணமானார். அந்நாட்களில் சுமார் 138 நாட்கள் கப்பல் பிரயாணமாக சென்னை வந்து சேர்ந்தார். இந்நாட்களில் இருப்பதை போல அந்நாட்களில் சொகுசு கப்பல்கள் இல்லை. சாதாரண படகு போன்றிருப்பது தான் கப்பல் என்று அந்நாட்களில் அழைக்கப்பட்டது. ஒரு நாள், இரண்டு நாள் கப்பல் பிரயாணமே அலுத்துப்போய்விடும். ஆனால் ஆண்டவரின் பணியை செய்ய, பல பாடுகளை தாங்கிக்கொண்டு, மோசேயை போல அரண்மனையில் தங்குவதை காட்டிலும், தன்னுடைய ஜனங்களோடு பாடநுபவிப்பதையே ராபர்ட் கால்டுவெல் தெரிந்துகொண்டார். மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்டார். தமிழ் மொழியை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற சிறந்த புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார்.

இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷ பணிக்காக சென்னையிலிருந்து இடையன்குடி என்ற சிறிய கிராமத்திற்கு சுமார் 700km நடந்தே சென்றார். இந்நாட்களில் காணப்படுகிற இடையன்குடியே கிராமமாக இருக்குமென்றால், சுமார் 200 வருடங்களுக்கு முன்பாக அந்த கிராமம் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். அவர் தன்னுடைய ஊழியத்தின் மூலம் சுமார் 4800 பேருக்கும் அதிகமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார். கல்வி மறுக்கப்பட்ட பிள்ளைகளுக்காக சிறந்த பள்ளிக்கூடத்தை கட்டினார். அவருடைய வாஞ்சையின்படி நல்ல தேவாலயத்தை இடையன்குடியில் கட்டினார்.

காலம் சென்று, அவர் தீராத நோயினால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய மகன் ஆஸ்திரேயாவிலிருந்து தன் தகப்பனை தன்னோடு இருக்கும்படி அழைத்தார். ஆனால் ராபர்ட் கால்டுவெல் அங்கே செல்லுவதற்கு மறுத்தார். மகன் சொன்னான், நீங்கள் அநேகருக்கு இயேசுவை பற்றி சொல்லிவிட்டீர்கள், அநேகர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள். பின்னே ஏன் நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வர மறுக்கிறீர்கள் என்று மகன் கேட்டான். ராபர்ட் கால்டுவெல் பதிலளித்தார், மகனே, நான் 4800 பேருக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தது உண்மைதான், ஆனால், இன்னும் ஒரு கால்டுவெல்லை நான் எழுப்பவில்லை என்று வருத்தத்தோடு சொன்னார். அப்படியே கடைசிமட்டும் தமிழ்நாட்டில் கர்த்தருடைய பணியை செய்து, அங்கேயே கோதுமை மணியாக விழுந்தார். அவர் நன்று படித்தவர், பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், கிறிஸ்துவுக்காக பல பாடுகளை சகித்தவர். அவரை பற்றி உலகம் இகழ்ந்தாலும், பரலோகம் அவரை மெச்சிக்கொள்ளும், பரலோகம் அவரை கனப்படுத்தும். இன்று அவர் பரலோகில் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுவார் என்பதிலும் ஒரு சந்தேகமும் இல்லை. இப்படிப்பட்ட தேவ மனிதர்களுக்காக தேவனை துதிப்போம். ராபர்ட் கால்டுவெல்லை போல அநேக மிஷினரிகள் நம்முடைய நாட்டில் எழும்ப ஜெபிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org